திரு தம்பு சந்திரசேகரராஜா (இந்திரன்) – மரண அறிவித்தல்
திரு தம்பு சந்திரசேகரராஜா (இந்திரன்) – மரண அறிவித்தல்
அன்னை மடியில் 09 FEB 1955 ஆண்டவன் அடியில் 04 FEB 2019

யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு சந்திரசேகரராஜா அவர்கள் 04-02-2019 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பு, பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், கரவெட்டியைச் சேர்ந்த பொன்னம்பலம் மங்கயக்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சிவசோதிமலர்(சோதி) அவர்களின் அன்புக் கணவரும், கபிலன், பிரணவன், மாயவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான நடராஜா, பஞ்சராணி, தேவராஜா மற்றும் தியாகராஜா(சுவிஸ்), செல்வராஜா(சுவிஸ்), பரஞ்சோதிராசா(சுவிஸ்), சின்னராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சற்குணதேவி, சிவானந்தி, விமலாதேவி, சிவநங்கை, நந்தினி, சிவகுமார், சிவகணேசன், சிவகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரணவன் – மகன் Mobile : +94779503389 பரஞ்சோதிராசா – சகோதரர் Mobile : +94762335894 Mobile : +94766092827 சின்னராசா(அப்பன்) – சகோதரர் Mobile : +94777382871

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu