திரு இராசதுரை பத்மநாதன் – மரண அறிவித்தல்
திரு இராசதுரை பத்மநாதன் – மரண அறிவித்தல்
(அகில இலங்கை சமாதான நீதவான், ஓய்வு நிலை கிராம உத்தியோகத்தர், முன்னால் இணைப்புச் செயலாளர், பொதுசன தொடர்பு அதிகாரி- மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி சபை) –
பிறப்பு 02 JAN 1927 இறப்பு 06 JAN 2019

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு கொம்மாந்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை பத்மநாதன் அவர்கள் 06-01-2019 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற இராமப்பிள்ளை(முன்னாள் இலத்தீன் மொழி ஆசிரியர் யாழ் இந்துக்கல்லூரி) அவர்களின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற இராசதுரை(முன்னாள் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர், சென்பட்ரிக்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம்), தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகரத்தினம் உடையார், மேர்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், மனோரஞ்சிதம் அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற கிருஷ்ணகுமாரி, சூரிய குமாரன்(சுவிஸ்), சந்திரகுமாரன்(சுவிஸ்), விஜயகுமாரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், ஜெகதாம்பாள்(ராசாத்தி), கணநாதன்(லண்டன்), சபாநாதன் மற்றும் ரவீந்திரநாதன்(கனடா), காலஞ்சென்ற பத்மாவதி(மலர்), சறோஜினிதேவி பொன்னுத்துரை, காலஞ்சென்ற ராசநாதன்(கனடா), தில்லைநாதன்(ஜெர்மனி), யோகநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற சுபாஸ் ரவீந்திரன்(இலங்கை வங்கி), ரோஜாமலர்(சுவிஸ்), சுமதி(சுவிஸ்), வசந்தினி(சுவிஸ்) ஆகியோரின் மாமனாரும்,
மனோராஜ்(ஓய்வு நிலை அதிபர்), மனோகரி(சுவிஸ்), ஜெயமலர், மனோகரன்(ஆசிரியர்), மகேந்திரன்(கனடா) ஆகியோரின் மைத்துனரும், பரணீதரன்(லண்டன்), அர்ஜுனா, அனிதா, சோபியா(சுவிஸ்), சோனியா(சுவிஸ்), மெனிஷா(சுவிஸ்), நிலுக்‌ஷா(சுவிஸ்), அனிஸ்கா(சுவிஸ்), அபிஸ்கா(சுவிஸ்), கோகுலா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பாட்டனும், அஷ்வினி(லண்டன்), அஷ்விதா(லண்டன்), அஷானா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கள்ளியங்காடு இந்துமயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு Mobile : +94652222026

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu