திரு கந்தையா ஸ்ரீகாந்தா -மரண அறிவித்தல்
திரு கந்தையா ஸ்ரீகாந்தா -மரண அறிவித்தல்
(உரிமையாளர் கந்தையா குறொசரி நிசான் பார்மசி )
பிறப்பு 30 NOV 1936

இறப்பு 1JAN 2019

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு ருத்திரா மாவத்தையை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஸ்ரீகாந்தா அவர்கள் 01-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி V. N. கந்தையா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சபாரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும், கருணாதேவி(பவளம்) அவர்களின் அன்புக் கணவரும், தர்ஷனா(பிரித்தானியா), காயத்ரி(ஐக்கிய அமெரிக்கா), நிசாங்கி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், விமலா, சிவம்(கனடா), ஸ்ரீபதி, விவேகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரபாகரன்(பிரித்தானியா), சிவதேவன்(ஐக்கிய அமெரிக்கா), ஜெய்கிஷான்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாம்பசிவம், காலஞ்சென்றவர்களான தனஞ்சயன், தனபாலசிங்கம் மற்றும் மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பரமநாதன், ஆனந்தன் மற்றும் கமலாதேவி, பரஞ்சோதி, சத்தியதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும், வருண், கார்த்திகன், விசாகன், விஷ்ணு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 06-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு. ப 08:00 மணியளவில் பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி. ப 01:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு Mobile : +94114863521

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu