திருமதி தியாகேஸ்வரி சச்சிதானந்தன் – மரண அறிவித்தல்
திருமதி தியாகேஸ்வரி சச்சிதானந்தன் – மரண அறிவித்தல்
பிறப்பு 29 JAN 1962 இறப்பு 07 DEC 2018

யாழ். புங்குடுதீவு 11 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகேஸ்வரி சச்சிதானந்தன் அவர்கள் 07-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற தில்லைநாதன்(J. P) மற்றும் கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சந்திரசேகரம்(முன்னாள் கிராமசேவகர்- நயினாதீவு) மற்றும் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், சச்சிதானந்தன்(முன்னாள் நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கபிலன், ஜஸ்வர்யா, தனுசன்(மொறட்டுவைப் பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புத் தாயாரும், புவேந்திரன், திலகவதி, ஞானேந்திரன், தரணீஸ்வரி, விமலேஸ்வரி, யோகேஸ்வரி, லோகேந்திரன், சியாமளா ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஜெயக்கொடிதேவி, சுவேந்திரராஜா, ரோகிணி, காலஞ்சென்ற கேதீஸ்வரன் மற்றும் நந்தகுமாரன், துசிகரன், உமா, வசந்தன், ரோகிணி, கருனாகரன், கோமதி, சுதாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் W.S.Fernando & Son Funeral Directors, No. 134, Chilaw Road, Negombo, Sri Lanka எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: கணவன், பிள்ளைகள், குடும்பத்தினர் முகவரி: Get Direction இல. 11, சூரியா வீதி, நீர்கொழும்பு.
தொடர்புகளுக்கு
வீடு Phone : +94312231403

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu