திரு. இராசையா நவரட்ணராஜா – மரண அறிவித்தல்
திரு. இராசையா நவரட்ணராஜா – மரண அறிவித்தல்
தோற்றம 17 NOV 1953 மறைவு 30 NOV 2018

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி கத்தானியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா நவரட்ணராஜா அவர்கள் 30-11-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை சிவஞானம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜா அவர்களின் அன்புக் கணவரும்,

துஷியந்தினி, துஸ்யந்தன், துவாரகன், துர்க்காந்தினி, துமிந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பன்னீர்ச்செல்வம், தனலெஷ்மி, நவலெஷ்மி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிறிக்குமார், காண்டீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கண்ணம்மா, சிவானந்தன், காலஞ்சென்ற இராசலிங்கம், சிவகுமார், சுகந்தி, காலஞ்சென்ற சகுந்தலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இறஞ்சினி, ஞானசீலன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

மைத்திரேயன், றீனா, துஷால் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று ஜெயரட்ணம் மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 05-12-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction இல. 452/4A, அளுத்மாவத்தை வீதி, கொழும்பு- 15
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் Phone : +94112526187

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu