திருமதி. ஸ்ரீ விக்கினேஸ்வரன் சிவநேஸ்வரி – மரண அறிவித்தல்
திருமதி. ஸ்ரீ விக்கினேஸ்வரன் சிவநேஸ்வரி – மரண அறிவித்தல்
மலர்வு 01 NOV 1941 உதிர்வு 30 NOV 2018

யாழ். ஆணைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீ விக்கினேஸ்வரன் சிவநேஸ்வரி அவர்கள் 30-11-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்துத்தம்பி, கண்மணி, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஸ்ரீ விக்கினேஸ்வரன்(ஓய்வுபெற்ற உப அதிபர்- யாழ் தொழில்நுட்பக் கல்லூரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

Dr. நகுலேஸ்வரன்(பாபு- மனநோய் வைத்திய நிபுணர்- பிரித்தானியா, லண்டன்), Dr.கேதீஸ்வரன்(கோபு- பொது வைத்திய நிபுணர்- யாழ் போதனா வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Dr. சிவராஜா(முன்னாள் தலைவர் சமுதாய மருத்துவப்பிரிவு யாழ் மருத்துவ பீடம்- யாழ் பல்கலைக்கழகம்), மகேஸ்வரி, விக்னராஜா, ஸ்ரீஸ்கந்தராஜா, செல்வராஜா(நூலகவியலாளர்- பிரித்தானியா, லண்டன்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

பிறிந்தா(பிரித்தானியா), பவானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற விக்கினேஸ்வரி, ராஜேஸ்வரி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற மங்களேஸ்வரன், ஜெகதீஸ்வரி, காலஞ்சென்ற முத்தீஸ்வரி, கமலேஸ்வரி, பரமேஸ்வரன், விமலேஸ்வரி, தியாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ராஜராஜேஸ்வரன், ஜெகதீஸ்வரி, காலஞ்சென்ற Dr. சிவசுப்பிரமணியம்(ENT வைத்திய நிபுணர்), ஜெகசோதி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

அபிஷேக்(பிரித்தானியா), அப்சரா(பிரித்தானியா), வைஷ்ணவி, சர்வேஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப.10:00 மணிவரை அவரது இளைய மகனது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் ஆணைக்கோட்டை காக்கைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction 96/1, குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
Dr. நகுலேஸ்வரன் Mobile : +94761516440

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu