திரு தம்பிப்பிள்ளை இராஜேந்திரா – மரண அறிவித்தல்
திரு தம்பிப்பிள்ளை இராஜேந்திரா – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய வர்த்தக அத்தியட்சகர் தொலை தொடர்பு திணைக்களம்)
பிறப்பு : 30 செப்ரெம்பர் 1935 — இறப்பு : 8 நவம்பர் 2018

யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை இராஜேந்திரா அவர்கள் 08-11-2018 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காரைநகர் வலந்தலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வீரகத்தியார் தம்பிப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

கரம்பொன் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முத்து கந்தையா நீலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரகாந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜசிந்திரா(லண்டன்) அவர்களின் அன்புத் தந்தையும்,

ரவி அவர்களின் அருமை மாமனாரும்,

திவ்வியா அவர்களின் பாசமிகு தாத்தாவும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம், ஞானகலை(கனடா), காலஞ்சென்ற இராசமலர், உத்தரை, சுகிர்தமலர், காலஞ்சென்ற மகேந்திரன் மற்றும் காலஞ்சென்றவர்களான சிவகலை, மகேஸ்வரி, பராசக்தி, பத்மாவதி, ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இந்திராணி, ஜெகநாதன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற விஜயரட்ணம், அரியரட்ணம்(இங்கிலாந்து), காலஞ்சென்ற ஈஸ்வரநாதன், கோபிநாதன்(அவுஸ்திரேலியா) காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன், தியாகராஜா, தேவராஜா மற்றும் செந்தில்நாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சிவகடாட்சம், பத்மாவதி, முத்துமலர், சுமித்தா, கெளசலாதேவி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 11-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:30 மணிமுதல் மு.ப 09:30 மணிவரை கொழும்பு பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11:30 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சந்திரா(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94112360150
ஜசி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447738716068
அரியரட்ணம்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447823535094
கோபிநாதன்(பபி- மைத்துனர்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61403339924
ஞானகலை(சகோதரி) — கனடா
செல்லிடப்பேசி: +19057707828

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu