திருமதி செபஸ்ரியாம்பிள்ளை அன்னப்பிள்ளை (இசபெல்) – மரண அறிவித்தல்




திருமதி செபஸ்ரியாம்பிள்ளை அன்னப்பிள்ளை (இசபெல்) – மரண அறிவித்தல்

மண்ணில் : 22 ஒக்ரோபர் 1913 — விண்ணில் : 23 ஒக்ரோபர் 2018

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், சிலாபத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செபஸ்ரியாம்பிள்ளை அன்னப்பிள்ளை அவர்கள் 23-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, சவரிமுத்து, மதலேன், சூசைமுத்து, யாக்கோப்பு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பிலோமினா, பாக்கியம், அந்தோனிப்பிள்ளை மற்றும் மேரியசிந்தா, ஞானசோதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பெனடிக்ற், அதிரியாதம்பிள்ளை, மேரிறீற்றா மற்றும் அல்பிரட், ஆனந்தன்(கனடா) ஆகியோரின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்ற மரிய டைசன், டொறிஸ்டே, சுதாகரன்(பிரான்ஸ்), சுபாஷினி, மேரி மெற்றில்டா, மரியசாந்தி(பிரான்ஸ்), அன்ரன்(கனடா), நிக்சன், உதயன்(பிரான்ஸ்), தேவன், அனிற்றா, குயின்ரஸ்(பிரான்ஸ்), ரஜனி, றெஜி(பிரான்ஸ்), சீலன்(டோகா), நிஷாந்தன்(கனடா), நிரோஷன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 26-10-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு இறுதி ஆராதனையின் பின்னர் சிலாபம் றே.க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், கொள்ளுப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94770383858
– — கனடா
தொலைபேசி: +19054718776
– — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33625871105
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94776189874

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu