திருமதி சிவபாக்கியம் நாகரட்ணம் – மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகரட்ணம் – மரண அறிவித்தல்
(கிச்சி- இந்து கலைகலாச்சார மன்ற செயலாளர் மற்றும் பன்னிரு திருமுறை வித்தகி)
பிறப்பு : 21 ஒக்ரோபர் 1947 — இறப்பு : 12 ஓகஸ்ட் 2018

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் நாகரட்ணம் அவர்கள் 12-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தவனம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சத்தியபாலன், பார்வதியம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நாகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

அனுலா, நளினா(கனடா), தயாளினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கண்ணன், ஓங்காரன்(கனடா), கேபாஜித்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தமிழ்க்குமரன், இஷானா மீனாட்சி(கனடா), லக்ஷ்மி நாராயினி(கனடா), அனேகன்(லண்டன்), அஜீகன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 15-08-2018 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நாகரட்ணம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779065421
அனுலா — இலங்கை
செல்லிடப்பேசி: +94777575461
நளினா — கனடா
செல்லிடப்பேசி: +16475700845
தயாழினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447412188884

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu