திரு மரியாம்பிள்ளை தவராஜா – மரண அறிவித்தல்
(குட்டி- ஓய்வுபெற்ற தபால் ஊழியர்)
பிறப்பு : 10 யூலை 1955 — இறப்பு : 10 ஓகஸ்ட் 2018
முல்லைதீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு அளம்பிலை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை தவராஜா அவர்கள் 10-08-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை, மேரிமாகிறேற் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், செபஸ்ரியாம்பிள்ளை மதலேனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரிஆரோக்கியம்(ராசக்கிளி) அவர்களின் பாசமிகு கணவரும்,
மரிய துஷாந்தி, M.T. நிஷாந், பேணாட் நிரோஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வராணி, யோய், பொன்ராஜா, பாலராஜா, சந்திரா, அரியகுமார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா, பேலி, தியாகராஜா, பாக்கியராஜா, நவரெட்ணராஜா, ஆனந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பகிரதன், நெல்சி மெரின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இருதயநாதர், ஆரோக்கியநாதர், அமிர்தநாதர், இருதயமேரி(செல்லக்கிளி), ஆரோக்கியமேரி, தேவறம்பை சகாயராணி, றோசு, ராணி அருள்மேரி, காலஞ்சென்றவர்களான சச்சுமனேஜர், பொன்ராசா, இலங்கைநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டனிலோர், பதுஸ்மன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் வவுனியா கோவில்குளம் 10ம் ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பின்னர் 12-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் அளம்பிலில் உள்ள அவரது இல்லத்திற்கு கண்ணீர் அஞ்சலிக்காக எடுத்துச்செல்லப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 04:00 மணியளவில் அளம்பில் புனித அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிஷாந்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94764003341
நிரோஜன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773742583
துஷாந்தி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772269903