திரு வைத்தியலிங்கம் கங்கைவேணியன் – மரண அறிவித்தல்
திரு வைத்தியலிங்கம் கங்கைவேணியன்
(கலாநிதி, கவிஞர் கலாபூஷணம், அகில இலங்கை சமாதான நீதவான், கொழும்பு மாநகரசபை முன்னாள் உறுப்பினர், இலங்கை கண்ணதாசன் மன்றத் தலைவர், முன்னாள் உபதலைவர்- ஜனநாயக மக்கள் முன்னனி)
அன்னை மடியில் : 21 ஓகஸ்ட் 1938 — ஆண்டவன் அடியில் : 8 யூலை 2018

யாழ். வேலணை 8ம் வட்டாரம் தலைகாட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தியலிங்கம் கங்கைவேணியன் அவர்கள் 08-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சு.வைத்தியலிங்கம்(ஆங்கில ஆசிரியர் – நாரந்தனை), விசாலாட்சி தம்பதிகளின் ஏக அருமை புதல்வரும், காலஞ்சென்ற செல்லத்துரை(புங்குடுதீவு), சின்னத்தங்கம் தம்பதிகளின் அருமை மருமகனும்,

காலஞ்சென்ற சிவயோகம்மா(பாவற்குளம் முன்னாள் ஆசிரியை- வவுனியா) அவர்களின் அருமைக் கணவரும்,

தவயோகவேணியன்(ஜூனியர் வேணியன் தவம் – டென்மார்க்), சகுந்தலா(சகு- டென்மார்க்), காலஞ்சென்ற சிவயோகவேணியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெசி, அலெக்சாண்டர் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

குணலிங்கம்(டென்மார்க்), பிரியதர்ஷினி(டென்மார்க்) ஆகியோரின் அருமை மாமனாரும்,

சண்பகாதேவி(கொழும்பு), கலைவாணி(கொழும்பு) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம்(டிக்கோயா ஆசிரியர்), பராசக்தி, பரமேஸ்வரி, தனலட்சுமி(முன்னாள் ஆசிரியை), குணரட்ணம்(முன்னாள் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர்- அவுஸ்திரேலியா), இரத்தினபூபதி(முன்னாள் ஆசிரியை- அவுஸ்திரேலியா), சீவரட்ணம்(மரினா காட்வெயர் காசாளர்), சீவரட்ணம்(சீவம்- இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சி. தெய்வேந்திரம்பிள்ளை(முன்னாள் ஆசிரியர்), சொர்ணலிங்கம்(முன்னாள் இலங்கை காவல்துறை உத்தியோகத்தர்), மாசிலாமணி(கிராமசேவை உத்தியோகத்தர்), இரத்தினபூபதி(சுவிஸ்), சத்தியருபவதி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற வல்லிபுரம்(முன்னாள் ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகலரும்,

வைத்திய கலாநிதி யனித்தா, பிரியன், யோக்கிம், நிதுர்ஷன், கமிலா, அலெக்ஸ், அடம் ஆகியோரின் அருமைப் பேரனும்,

அன்பு அவர்களின் அருமைப் பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 09-07-2018 திங்கட்கிழமை தொடக்கம் 12-07-2018 வியாழக்கிழமை வரை தினமும் மு.ப 09:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சகுந்தலா — டென்மார்க்
தொலைபேசி: +4526223384

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu