திருமதி கந்தையா சோதி – மரண அறிவித்தல்
திருமதி கந்தையா சோதி – மரண அறிவித்தல்

பிறப்பு : 22 ஓகஸ்ட் 1930 — இறப்பு : 14 மே 2018

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா மன்னார் வீதி பூவரசங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சோதி அவர்கள் 14-05-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற இராமநாதன், கற்பகம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தினி(கனடா), வினோதினி(அவுஸ்திரேலியா), குமுதினி(வவுனியா), ஸ்ரீகாந்தன்(நோர்வே), யோகினி(கனடா), ஸ்ரீகரன்(தரு- வவுனியா), ஸ்ரீனிவாசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், சிவப்பிரகாசம், சோமசுந்தரம், பாக்கியம், சிவமணி மற்றும் பூபதி, இராசமணி, காலஞ்சென்ற அப்புத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற மகேந்திரன், பாலசுந்தரம், காலஞ்சென்ற சதாசிவம், தயா, சர்வானந்தன், அனுஷா, சாந்தி, புவனேந்திரன், கமலினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியநாதன், கனகமணி, வேலுப்பிள்ளை மற்றும் சிதம்பரநாதன், காலஞ்சென்ற மகேஸ்வரன் ஆகியோரின் மைத்துனியும்,

வாகீஷன், சிந்துஜன்- பிரமிளா, ரகூர்த்தன், மனஸ்வினி- கரிகாலன், துஷாந்தன், சாருகா- ஜெயக்குமார், பிரக்தன்- தர்ஷி, செந்துர்க்கா, கிர்திகா- கிருஷாந்தன், கஜன், தேனுஷா, பவித்திரா, விதுஷன், அபிஷா, ஆகாஷ், கம்ஷிகா, சாருஜன், சஞ்சயன், கர்ஷனா, கர்னீகா, அக்‌ஷயன், அகர்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

எயிடன், சியன்னா, சஷ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-05-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 271/1,
மன்னார் வீதி,
பட்டாணிச்சூர்,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஸ்ரீகரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776245091
குமுதினி — இலங்கை
தொலைபேசி: +94242224049

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu