செல்வன் ஈழவன் பிரபாகரன் – மரண அறிவித்தல்
செல்வன் ஈழவன் பிரபாகரன் – மரண அறிவித்தல்

கண்மகிழ : 22 ஓகஸ்ட் 2003 — கண்நெகிழ : 10 மே 2018

ஜெர்மனி Hildesheim ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஈழவன் பிரபாகரன் அவர்கள் 10-05-2018 வியாழக்கிழமை அன்று ஆண்டவனின் அற்ப ஆசை காரணமாக விண்ணுலகம் சென்றார்.

அன்னார், கருணைநாதன்(வல்வெட்டி) உமாதேவி(பண்ட‌த்தரிப்பு) தம்பதிகள், யோக‌சிங்கம்(பளை) தேவகி(ரோசா- வவுனியா) தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

பிரபாகரன் சுரேகா தம்பதிகளின் தவப்புதல்வரும்,

நிலவன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காந்தி– கருணி, ஜெய‌ந்தன், சனா ஆகியோரின் பாசமிகு ஆசைப் பெறாமகனும்,

சுரேன்– ஜென்சி, மயூரன்- சாந்தி ஆகியோரின் செல்ல மருமகனும்,

பிரியன், துவாரகா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

அகரன், இலக்கணா, ஜெய் ஆகியோரின் அன்பு மைத்துன‌ரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்பு நெஞ்சங்களை வென்றவனாய்!
அபூர்வத்தின் வெளிப்பாடாய்!

“ஈழவனை” உலகம் உச்சரிக்க வைத்தவனாய்!
புலத்தில் இனத்தின் முகமாய்!
பெற்றோரின் நெஞ்சங்களை வென்றவனாய்!

யுகத்தில் தோன்றும் அற்புதனாய்!
புகழின் உச்சியை மீறியவனாய்!
காலனையும் கலங்க வைத்தவனாய்!

விளையாட்டில் வீர வேங்கையாய்!
உன் பெயரை வரலாற்றில் பதித்தவனாய்!
எம்குல “அபிமன்யு” என வாழ்ந்தவனாய்!

ஈழம் எங்கள் தேசமென…..!..!!..!!!
உன் பெயர் கொண்டு உலகறிய வைத்தவனாய்!
எம் இனத்தில் ஜேர்மனின் கால்பந்தாட்ட
தேசிய அணிக்குத் தெரிவான முதல் ஈழவீரனாய்!

உன் பிரிவால் உலகை உறைய வைத்தவனாய்!
என்றும் எங்கள் ஈரவிழிக்குள் வாழ்பவனாய்!
சென்றாலும் வென்றவனாய்! சென்ற உன்னை வழியனுப்பி!
புதைக்கவில்லை விதைக்கின்றோம்- மீண்டும்
முளைவிடுவாய் என்ற மாறாத எண்ணத்தோடு…!…!!….!!!

எங்கள் அன்புச் செல்வம் ஈழவனின் ஆத்மா சாந்திபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கும் அப்பப்பா அப்பம்மா, அம்மப்பா அம்மம்மா, அப்பா அம்மா, நிலவன் தம்பி, மாமாமார் மாமிமார், சித்தப்பாமார் சித்திமார், சித்தாக்கள், ஆத்தி, தம்பிமார், தங்கைமார், மச்சான்மார், மச்சாள் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள்.

அன்னாரின் இறுதி அஞ்சலி 16-05-2018 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் Südfriedhof Marienburger StraBe. 90 E, 31141 Hildesheim என்னும் முகவரியில் நடைபெறும்.

தகவல்
அப்பா, அம்மா, உறவினர்கள்
12345678910
தொடர்புகளுக்கு
கருணைநாதன் — ஜெர்மனி
தொலைபேசி: +495121514408
ரகுநாதன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915171892701
காந்தி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491738325790
சுரேன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33628421173
யோகசிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770273141
மூர்த்தி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915253922640

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu