திரு நடராஜா நவரட்ணராஜா – மரண அறிவித்தல்




திரு நடராஜா நவரட்ணராஜா – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்- கொழும்பு வவுனியா, Mascons Limited)
மலர்வு : 13 சனவரி 1945 — உதிர்வு : 7 ஏப்ரல் 2018

யாழ். வல்வெட்டி வேவில் வளவைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் வடக்கு, கொழும்பு தெகிவளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா நவரட்ணராஜா அவர்கள் 07-04-2018 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, நாகரத்தினம்(உரும்பிராய் காட்டுவயிரவர் உரிமையாளர், பொன்னம்பலத்தின் மகள்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பலீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

யாழினி, தாட்சாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கோபிரமணன் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சிவராசா, மல்லிகாதேவி, இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகரட்ணம்(கனடா), விஜயரட்ணம்(ஓமான்), குணரட்ணம், ஜெயரட்ணம், மகேந்திரராசா, வரதராசா(பல்வைத்தியர்- கொழும்பு), ரஞ்சினி(சுவிஸ்)ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 09-04-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 10-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைதொடர்ந்து பி.ப 03:00 மணியளவில் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94112723613
மகள் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773637494
மைத்துனர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776543166
யோகரட்ணம் — கனடா
தொலைபேசி: +14163356930
மைத்துனி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41712232185

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu