திருமதி சொக்கலிங்கம் புவனேஸ்வரி – மரண அறிவித்தல்




திருமதி சொக்கலிங்கம் புவனேஸ்வரி – மரண அறிவித்தல்

பிறப்பு : 22 டிசெம்பர் 1932 — இறப்பு : 27 பெப்ரவரி 2018

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் புவனேஸ்வரி அவர்கள் 27-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சொக்கலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பகீரதன், பார்த்திபன்(கனடா), லலிதாம்பாள்(வவுனியா), தயாபரன்(கனடா), காலஞ்சென்றவர்களான பத்மினி, பிரதீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற காமாட்சி, கனகலிங்கம், தியாகராஜா, பரமலிங்கம், காலஞ்சென்ற பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தியாகேஸ்வரன், ராஜி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சதாசிவம், ஞானம்மா, கலாநிதி அகிலேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சபாரெத்தினம், பாலாமணி, செல்லம்மா, சுப்பிரமணியம், சோபனம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சிவமதி, ஜெயமதி, ராஜாஜி(கனடா), பாலாஜி(லண்டன்), சிவாஜி, துஷ்யந்தினி(லண்டன்) ஆகியோரின் பெரிய தாயாரும்,

கோபிகா(பெல்ஜியம்), தேனுஷா(முகாமைத்துவப் பீடம், யாழ். பல்கலை), லோஜிகா(கனடா), உஷானிகா(கனடா), ஜசிகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-03-2018 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 185/6,
பண்டாரிக்குளம்,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லலிதாம்பாள்(குமுதா- மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94763418699
தயாபரன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14379900750
தியாகேஸ்வரன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771433275

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu