திரு வைத்திலிங்கம் சண்முகநாதன் – மரண அறிவித்தல்
திரு வைத்திலிங்கம் சண்முகநாதன்
தோற்றம் : 8 யூலை 1939 — மறைவு : 7 டிசெம்பர் 2017

யாழ். நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், ஏழாலை வடக்கு மாகியப்புலத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Épinay-sur-Seine ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சண்முகநாதன் அவர்கள் 07-12-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கைச்சியம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

உதயகுமாரி(மலர்- பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தினி(நோர்வே), சாந்தசொரூபன்(டென்மார்க்), நாகரஞ்சினி(ரஞ்சினி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கிருஸ்ணமூர்த்தி, தையல்நாயகி, மற்றும் கமலாசனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மோகனதாஸ்(நோர்வே), கெளசிகா(டென்மார்க்), மகாராசா(ஜெயம்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மனோன்மணி, காலஞ்சென்றவர்களான சண்முகராசா, தனராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பாலசிங்கம், இரத்தினசிங்கம்(பிரான்ஸ்), குணசிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், தெய்வேந்திரன் மற்றும் ரதிமலர்(கிளி- சுவிஸ்), லலிதாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அத்தானும்,

சித்திவிநாயகம், நாகலட்சுமி, சிறிகாந்தன், நாகநந்தினி, மாவீரர், தனலட்சுமி ஆகியோரின் அன்பு மாமாவும்,

வக்சலன், காலஞ்சென்ற சத்தியசீலன், யசோதா, சரணபவன், ஜம்புகேஸ்வரி, நகுலன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சிந்துஜன், சினேகா, ரசிகா(நோர்வே), நிசாந், நிலக்சன், ஜஸ்மின்(டென்மார்க்), விதுசன், நிதுசா, தர்மிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-12-2017 புதன்கிழமை அன்று பி.ப 01:45 மணிதொடக்கம் பி.ப 02:30 மணிவரை Cremetauriam Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France என்னும் முகவரியில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:45 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 09/12/2017, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/12/2017, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 12/12/2017, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.
கிரியை
திகதி: புதன்கிழமை 13/12/2017, 11:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.
தொடர்புகளுக்கு
மனைவி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33950856009
ரஞ்சினி(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33661641405
ஜெயம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33663974496
குனேஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33662827549

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu