திருமதி அப்பாத்துரை ரூத் பூபதியம்மா – மரண அறிவித்தல்





பிறப்பு : 9 யூன் 1931 — இறப்பு : 22 செப்ரெம்பர் 2017

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாத்துரை ரூத் பூபதியம்மா அவர்கள் 22-09-2017 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாக்குட்டி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா கதிராசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அப்பாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஸ்ரீரங்கநாதன் மற்றும் சிறீபுஸ்பராணி(கனடா), சிறீலோகராணி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இரத்தினேஸ்வரி(உடுப்பிட்டி), K. லோகநாதன்(கனடா), R. லோகநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சபாரட்ணம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

சுகன்யா, யசோதரன்(கனடா), கமலதாசன், தர்சனா(கனடா), றஜீனா(கனடா), நிரஞ்சனா(கனடா), கிறேஸ் நீருஜா(சுவிஸ்), நிலேஷ் ஜேசன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சகானா(கனடா), நத்தானியேல்(கனடா), இனியா(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 23-09-2017 சனிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்லை கல்லறைத்தோட்ட மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிறீபுஸ்பராணி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16478837051
சிறீலோகராணி(மகள்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41795511180
கமலதர்சன்(பேரன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94766895236

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu