Dr. சின்னத்தம்பி சண்முகநாதன் – மரண அறிவித்தல்




Dr. சின்னத்தம்பி சண்முகநாதன் – மரண அறிவித்தல்

இறப்பு : 8 ஓகஸ்ட் 2017

யாழ். கோப்பாய் இருபாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சண்முகநாதன் அவர்கள் 08-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னத்தம்பி(இருபாலை) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இரத்தினராஜா(சண்டிலிப்பாய்) தம்பதிகளின் அன்பு மருகனும்,

நளாயினி அவர்களின் அன்புக் கணவரும்,

விசாகன்(லண்டன்), ஜனனி(லண்டன்) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

தவேந்திரராஜா(இந்திரன்- லண்டன்), கோசலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆரபி, அர்ச்சனா, லக்‌ஷா, ரிஷிகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10-08-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் A.F.Raymond Funeral Parlour எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 04:30 மணியளவில் கனத்தை பொது இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
நளாயினி சண்முகநாதன்
தொடர்புகளுக்கு
நளாயினி சண்முகநாதன் — இலங்கை
தொலைபேசி: +94112585535

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu