திரு மயில்வாகனம் நடராஜா – மரண அறிவித்தல்
திரு மயில்வாகனம் நடராஜா – மரண அறிவித்தல்

(முன்னாள் ஆசிரியர், உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி பழைய மாணவர்)
பிறப்பு : 15 ஒக்ரோபர் 1946 — இறப்பு : 29 யூலை 2017

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் நடராஜா(V.M நடராஜா) அவர்கள் 29-07-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சுந்தரம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீபா, சதீஷன்(Manager Seylan Bank), நிரூபா(NBSL) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பகவதி சிவனேசன்(வல்வெட்டி) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

சக்திவேல் அவர்களின் அன்பு மைத்துனரும்,

ரோகினி அவர்களின் அன்புச் சகலனும்,

வினாயகதாஸ், ஷாமினி, தரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அக்‌ஷனா, சித்தார்த் அபிமன்யு, கனிஷ்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 05-08-2017 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
18, Madangahawathe lane,
Wellawatte,
Colombo -06
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வசந்தா — இலங்கை
தொலைபேசி: +94112582862
பிரதீபா — கனடா
தொலைபேசி: +12896523387
சதீஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94714567789
நிருபா — இலங்கை
செல்லிடப்பேசி: +94710228282

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu