திரு சின்னத்தம்பி செல்லப்பா – மரண அறிவித்தல்
திரு சின்னத்தம்பி செல்லப்பா – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய ஆசிரியர்- மந்துவில் ஸ்ரீ பாரதி வித்தியாலயம்)
மலர்வு : 19 பெப்ரவரி 1929 — உதிர்வு : 16 யூலை 2017

யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி செல்லப்பா அவர்கள் 16-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சேதுப்பிள்ளை தம்பதிகளின் ஏகப்புத்திரரும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராசம்மா(பரமேஸ்வரி ரீச்சர் வரணி மகாவித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,

வசந்தா(ஆசிரியை- கொ/ பாத்திமா முஸ்லீம் மகளிர் கல்லூரி), வனஜா(நியூசிலாந்து), வசீகரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற மீனாட்சிப்பிள்ளை, பூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மராஜா(விரிவுரையாளர் உயர்தொழில்நுட்பக் கல்லூரி, மட்டக்குளி), சுதாகரன்(நியூசிலாந்து), சிவசுதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கேசகர், சுவாமிநாதர் மற்றும் வேலாயுதபிள்ளை, காலஞ்சென்ற மங்களேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பிரியங்கா, ஹனுஷ்கா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 17-07-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் பி.ப 08:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 18-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 02:00 மணிக்கு கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
13A 3/2 Fussels Lane,
Wellawatte,
Colombo- 06.

தகவல்
பிள்ளைகள், மருமக்கள்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94112559943
செல்லிடப்பேசி: +94775487076

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu