திருமதி அலோஷியஸ் மேரிபிறக்சீடா (மல்லிகா) – மரண அறிவித்தல்




திருமதி அலோஷியஸ் மேரிபிறக்சீடா (மல்லிகா) – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 29 மார்ச் 1945 — ஆண்டவன் அடியில் : 1 யூன் 2017

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை வசிப்பிடமாகவும், வவுனியா அண்ணாநகரை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அலோஷியஸ் மேரிபிறக்சீடா அவர்கள் 01-06-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி போல் சவிராசி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான தியோகு அந்தோனி சவினம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அலோஷியஸ்(இளைப்பாறிய அதிபர்- சின்னமடு தமிழ் பாடசாலை, ஸ்கந்தபுரம் இரண்டாம் பாடசாலை) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்ற றூபின் மேரி கிறேசியா, நொயலின் சாந்தினி காமலிற்றா(சுவிஸ்), எட்வின் நிவில் தேவராஜ்(சுவிஸ்), றோஸ்மேரி அன்ரனிற்றா(ஆசிரியை- வவுனியா முருகனூர் சாரதா வித்தியாலயம்), யூட் மரிய அன்ரன்(பிரான்ஸ்), லூட்ஸ் றஞ்சினி பப்ரிஸ்ரா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கனியூட் வலன்ரைன், நிமால் மேரிடெனி(இளைப்பாறிய ஆசிரியை- காலி அல்மிரன் முஸ்லீம் வித்தியாலயம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெராட் ஜெஸ்மன்(சுவிஸ்), டல்றீன் ஏற்றியன்ஸ்(சுவிஸ்), சந்திரபாஸ்(இத்தாலி), யாழினி(இலங்கை), கஜவதனன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சந்திரா வலன்ரைன், சித்தீக்(இளைப்பாறிய ஆசிரியர்- காலி அல்மிரன் முஸ்லீம் வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஸ்ரிவின்சன், ஸ்ரெவீனா, டார்வின், கார்த்திகா, லஷ்மிகரன், எமில்ரன், எடின்சன், கரோலின், அலெக்ஸி, சோபி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 05-06-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 10:00 மணியளவில் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மு.ப 11:30 மணியளவில் இறம்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 13,
அண்ணாநகர் பிரதானவீதி,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அலோஷியஸ் — இலங்கை
தொலைபேசி: +94242051438
செல்லிடப்பேசி: +94786048525
நொயலின் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41414201783
செல்லிடப்பேசி: +41763106749
எட்வின் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41418502712
செல்லிடப்பேசி: +41764989903
அன்ரனிற்றா — இலங்கை
செல்லிடப்பேசி: +94776648525
யூட் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651753368
றஞ்சினி — பிரான்ஸ்
தொலைபேசி: +33134431261
செல்லிடப்பேசி: +33752973355

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu