திரு நடராஜா பாலராமன் – மரண அறிவித்தல்




balaramanதிரு நடராஜா பாலராமன் – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய முகாமையாளர்- இலங்கை வங்கி வெள்ளவத்தை)
மறைவு : 28 மே 2017

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா பாலராமன் அவர்கள் 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா செல்வரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி ஆதிநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற யசோதரா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ஞானப்பிரகாசம்(புசி- பொறியியலாளர்), மன்மதராஜன்(இளைப்பாறிய அதிபர்- கொழும்பு இந்துக் கல்லூரி, இரத்மலானை), மங்கயற்கரசி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr. பாலச்சந்திரன்(பிரித்தானியா), விக்கினேஸ்வரன்(நீதியரசர், முதலமைச்சர்- வடமாகாணசபை), சுமித்ராதேவி(பிரித்தானியா), அருள்சோதி(கொ/ தெகிவளை தமிழ் மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஷாம்பவி மன்மதராஜன்(Engineer- LECO), ஹம்ஷி மன்மதராஜன்(Final Year Student, IIT) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

வைஸ்னவி(பிரித்தானியா), ஈசான்(பிரித்தானியா), நிர்மலகுகன்(Attorney General Department), ஜவ்வனகுகன்(Accountant) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 31-05-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியை 01-06-2017 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 40,
E.A. குரே மாவத்தை,
வெள்ளவத்தை,
கொழும்பு.

தகவல்
நடராஜா மன்மதராஜன்(சகோதரர்)
தொடர்புகளுக்கு
நடராஜா மன்மதராஜன்(சகோதரர்) — இலங்கை
தொலைபேசி: +94112588270
செல்லிடப்பேசி: +94758089293

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu