திரு அல்பிறட் பிரான்சிஸ் – மரண அறிவித்தல்




francisதிரு அல்பிறட் பிரான்சிஸ் – மரண அறிவித்தல்

(ஜெனம், Family Shop உரிமையாளர், திருமறைக் கலாமன்ற ஆரம்ப உறுப்பினர் யாழ்ப்பாணம், பிரபல நாடக, நாட்டுக்கூத்து கலைஞர்)
அன்னை மடியில் : 9 மார்ச் 1941 — இறைவன் அடியில் : 29 ஏப்ரல் 2017

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட அல்பிறட் பிரான்சிஸ் அவர்கள் 29-04-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அல்பிறட் முத்தம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும், ஞானப்பிரகாசம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி ராணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சாலற் வினித்தா, கெனத் விக்கினராஜா(விக்னா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மேரி றெஜினா(சந்திரா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

யேசுரட்ணம், லெற்றீசியா(யூஜினி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாரங்கி, கலாஞ்சலி, ஹரினி, ஆகாஷ், எட்மன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 01-05-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 3:00 மணியளவில் வத்தளை புனித அன்னம்மாள் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94112940510
மகன் — கனடா
செல்லிடப்பேசி: +15194005936

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu