திரு முத்தையா சிவப்பிரகாசம் – மரண அறிவித்தல்




sivapragasamதிரு முத்தையா சிவப்பிரகாசம் – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற அதிபர்)
பிறப்பு : 20 மே 1938 — இறப்பு : 30 ஏப்ரல் 2017

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 01ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா சிவப்பிரகாசம் அவர்கள் 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா கண்ணகை தம்பதிகளின் அன்புப் புத்திரரும், நடராஜா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாம்பிகை(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

வைத்திய கலாநிதி சிவமோகன்(வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்), சிவரஞ்சன்(உதவிக் கல்விப் பணிப்பாளர்), சிவஜயந்தன்(அபிவிருத்தி உத்தியோகத்தர்), சிவதர்ஷன்(முன்னாள் அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர்- லண்டன்), சிவதர்ஷினி(ஆங்கில ஆசிரியை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தேவிகா(ஆசிரியை), சோமாவதி(ஆசிரியை), ஜீவினி(முகாமைத்துவ உதவியாளர்), ரஜினிதேவி(லண்டன்), சதீஸ்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சசிமோகனா(மருத்துவ மாணவி), உதயபிரதாப்(மருத்துவப்பீட மாணவன்), அபிஷாலினி(சட்டக்கல்லூரி மாணவி), அருண்சன்(பொறியியல் மாணவன்), அனோஜிதா(மருத்துவபீட மாணவி), அபினா(மருத்துவப்பீட மாணவி), சங்கீர்த்தனா(மாணவி), காலஞ்சென்ற அபிஷேகன், தனஞ்சிகா, நயன்சிகா, விதுர்ஷன், விஷ்னுஜன், சுமேதா(லண்டன்), திஷான்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 01ம் வட்டாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவமோகன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772093213
சிவஜயந்தன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775284536
சிவதர்ஷன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447455164840

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu