திருமதி மேரி குயீன் ஜெயலீலா பேரின்பநாயகம் – மரண அறிவித்தல்
jeyaleelaதிருமதி மேரி குயீன் ஜெயலீலா பேரின்பநாயகம் – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய ஆசிரியை)
பிறப்பு : 4 ஓகஸ்ட் 1940 — இறப்பு : 18 ஏப்ரல் 2017

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney Wentworthville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேரி குயீன் ஜெயலீலா பேரின்பநாயகம் அவர்கள் 18-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பேரின்பநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மேரி கிரேஸ் மாதுரம், எட்வர்ட் குணசிங்கம்(அவுஸ்திரேலியா), மேரி மார்கரேட்(அவுஸ்திரேலியா), ரெஜிஸ் ராஜசிங்கம்(லண்டன்), மரியதாசசிங்கம்(லண்டன்), ஜெயபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அனட் குணசிங்கம், மாரி மரியதாசசிங்கம், பத்மலோஜினி ஜெயபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Nishmi, Sharmi, Bharmi, Trisha, Donya ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இறுதி மரியாதைக்காக 22-04-2017 சனிக்கிழமை அன்று மு.ப 08:45 மணிமுதல் மு.ப 09:00 மணிவரை 4 Bennett St, Wentworthville எனும் முகவரியில் அமைந்துள்ள Our Lady Of Mount Carmel கத்தோலிக்க ஆலயத்தில் வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மு.ப 11:00 மணியளவில் Rookwood St. Peter’s கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அனட் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61294846362
செல்லிடப்பேசி: +61400330544
எட்வர்ட் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61400330744
ஜெயபாலசிங்கம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447786078179

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu