திருமதி சிந்தாமணி குமாரசாமி – மரண அறிவித்தல்
sinthamaniதிருமதி சிந்தாமணி குமாரசாமி – மரண அறிவித்தல்

(பழைய மாணவி அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதயா வித்தியாசாலை, தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி)
பிறப்பு : 6 டிசெம்பர் 1936 — இறப்பு : 1 ஏப்ரல் 2017

யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிந்தாமணி குமாரசாமி அவர்கள் 01-04-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் விசாலாட்சி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லையா இளையாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குமாரசாமி(ஓய்வுபெற்ற இலங்கைப் பாராளுமன்ற சமகால உரைபெயர்ப்பாளர், அப்பலோ அல்லது பூட்டான்/திம்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

வாமதேவன், குகமணி, தேவதாசன், காலஞ்சென்ற சாரதாமணி, சோதிமணி, கெங்காமணி, ஆனந்தகுமாரன், புராந்தகன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலசுந்தரி, காலஞ்சென்ற வேல்சாமி, சவுந்தராதேவி, காலஞ்சென்றவர்களான பீற்றர் பொன்கலன்ட், அமிர்தலிங்கம், மற்றும் செல்வரத்தினம், இந்திராதேவி, உஷா, காலஞ்சென்றவர்களான கனகமணி, பராசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற அப்புத்துரை, மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலியும்,

சங்கரன், அரன், தற்பரன், கோதரன், ஜானகி, சனந்தனன், அம்புஜன், சுரூபன், சர்வோதயன், தோத்திரன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

தமிழினி, வலவன், விறலோன், இனியவள், இனியவன், கனியவன், எழிலினி, மகிழினி ஆகியோரின் அன்புப் பெரியத்தையும்,

நவீனா, தீபிகா, சகானா, தருணி, நவீன், ஆரபி, வித்தகி, நேத்ரா, அருளினி, சாதுரியன், வர்சா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் அளவெட்டி வடக்கு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
அம்பிகை இல்லம்,
அளவெட்டி வடக்கு,
அளவெட்டி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணவர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94786202820
விறலோன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771246387
பரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773301431
குகமணி — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61296361348
சோதிமணி – ஜானகி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651601732
கெங்காமணி — பிரித்தானியா
தொலைபேசி: +442087151877
கோதரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447448546681

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu