திரு செபஸ்ரியன் ஜோச் – மரண அறிவித்தல்




jorchதிரு செபஸ்ரியன் ஜோச் – மரண அறிவித்தல்

தோற்றம் : 24 பெப்ரவரி 1946 — மறைவு : 27 சனவரி 2017

யாழ். சென். பற்றிக்ஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட செபஸ்ரியன் ஜோச் அவர்கள் 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற A.K.ஜோசப், மேரி அந்தோனிப்பிள்ளை(தங்கபொன்னு) தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற செல்வரெட்டினம், பொன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இமல்டா(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜோச் லூயிஸ்(சூட்டி- லண்டன்), திரேசா(சுவிற்ரி- யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற நியூட்டன்(பஸ்ரி), லூட்ஸ் யசிந்தா(யசி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிங்கராயர்(யோகரட்ணம்- கனடா), கிரிஸ்டியன்(யோராஸ்- ஜெர்மனி), மரியராணி(சறோ- திருகோணமலை), மேரி ஜோசபின்(புஸ்பம்- யாழ்ப்பாணம்), மேரி மாகிரட்(புனிதம்- ஜெர்மனி), அன்ரன் ரோய்(ராஜன்- யாழ்ப்பாணம்), நியூட்டன்(துரை- ஜெர்மனி), ஜெகநேசன்(ஜெகா- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நளினி(லண்டன்), அன்ரன்(பிரான்ஸ்), சந்திரன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான திரேஸ்மலர், பொன்ராசா, யோகம், செல்வம், பபி, ரொபேட், மற்றும் ஜீவம்(ஜெர்மனி), ஜோதி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லெயான், லிடியா(லண்டன்), சஞ்சிகா, அனுஷன்(பிரான்ஸ்), தனுஷா, சௌமியா(யாழ்ப்பாணம்), எல்வின், எலோடி, எலிசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்புத் தந்தையும் அரவணைக்கும் சகோதரனாயும்
கண்ணில் உயிரை வைத்துக் கொண்டு
இன்று காற்றில் கலந்துவிட்டாய்!
இந்த மண்ணில் உங்களைப் போல் இனியாரை
நாங்கள் காண்போமா!

விண்ணில் நட்சத்திரமாய் மின்னும் பிரிந்த உயிர்
என்று பிறர் சொல்லிக் கேட்டதுண்டு
உன்னை எந்த விண்ணோய் நாங்கள்
என்று காண்போமா!

அன்னாரின் திருவுடல் 27-01-2017 வெள்ளிக்கிழமை முதல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 30-01-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 70,
பழைய பூங்கா வீதி,
கொய்யாத்தோட்டம்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜோச் லூயிஸ்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779361483

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu