Dr.முருகேசு கனகசபை – மரண அறிவித்தல்




kanagasabaiDr.முருகேசு கனகசபை – மரண அறிவித்தல்

(M.K.S- Medical Clinic கொக்குவில்)
தோற்றம் : 13 ஏப்ரல் 1939 — மறைவு : 27 சனவரி 2017

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரைத்தீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு கனகசபை அவர்கள் 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னையா, செல்லக்கண்ணு(குஞ்சி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்களேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கௌரி(கனடா), Dr.K.சிவகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேசமூர்த்தி(மோகன்-கனடா), தாரணி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சண்முகம், அருணாச்சலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகராஜா, பாலசந்திரன், மற்றும் கமலநாதன்(லண்டன்), விமலநாதன்(லண்டன்), செந்தி(லண்டன்), அன்னசோதி மற்றும் காலஞ்சென்ற மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பத்மநாதன், அமுதவல்லி, அருணாச்சலம், காந்திமதி ஆகியோரின் அன்பு சம்பந்தியும்,

ரேனிஷா(கனடா), பவித்திரா(கனடா), காவியா(கனடா), ரூபியா(கனடா), இனியா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 27/11,
இந்து மகளிர் வீதி,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
Dr.K. சிவகுமார்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94763979190
கௌரி கணேசமூர்த்தி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94212228746
உஷாந்தி சுதன்(மருமகள்) — இலங்கை
தொலைபேசி: +94212228746
கமலநாதன்(மைத்துனர்) — பிரித்தானியா
தொலைபேசி: +442085180549
விமலநாதன்(மைத்துனர்) — பிரித்தானியா
தொலைபேசி: +442085532981
செந்தி(மைத்துனி) — பிரித்தானியா
தொலைபேசி: +441375463458
சுந்தரலிங்கம் சுதன்(பெறாமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776935610

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu