திரு வைத்திஐயம்பிள்ளை பரமலிங்கம் – மரண அறிவித்தல்




paramalingamதிரு வைத்திஐயம்பிள்ளை பரமலிங்கம் – மரண அறிவித்தல்

(பிரபல தொழிலதிபர், நிர்வாக இயக்குனர்- Excellent PVC (PVT) Ltd, உரிமையாளர்- Excellent Enterprises, முன்னாள் உரிமையாளர்- Excellent Marketing Enterprises- Kilinochchi, V.I.P Express(Colombo – Jaffna))
தோற்றம் : 12 பெப்ரவரி 1944 — மறைவு : 19 டிசெம்பர் 2016

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மகாவித்தியால மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திஐயம்பிள்ளை பரமலிங்கம் அவர்கள் 19-12-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, கண்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

லோகாதேவி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

யசோதா, குணசீலன், கோபிநாத்(கனடா), விஜேந்திரநாத்(கனடா), தனுஷா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பூரணம், அருணாசலம், காலஞ்சென்ற ஆறுமுகம்(Primo Plast Industries, Wattala), சிவயோகம், நடராஜா(Prince Plastice Industries (PVT) ltd, Colombo), விஜயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தனுஷ்கோடி, குணேஸ்வரி, சறோஜினிதேவி, குமாரசூரியர், மேகலாறஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr.பிரசன்னா(De Soysa Hospital), தர்சனன்(B.Eng), தர்சினி(B.Sc- Mgt), சமிதினி(Medicine- Eastern University, Sri Lanka) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 22-12-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.95,
மகாவித்தியால மாவத்தை,
கொழும்பு.

தகவல்
Dr.V.I.நடராஜா
தொடர்புகளுக்கு
Dr.V.I.நடராஜா(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777733212

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu