திரு பொன்னையா சிவகுருநாதன் – மரண அறிவித்தல்
sivakurunathanதிரு பொன்னையா சிவகுருநாதன் – மரண அறிவித்தல்

(நாராயணதாஸன்- முன்னாள் சாரதி பயிற்சிப் போதனாசிரியர்)
தோற்றம் : 4 யூலை 1922 — மறைவு : 31 ஒக்ரோபர் 2016

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், பொன்னாலையை நிரந்தர வதிவிடமாகவும், யாழ்ப்பாணம் கோவில் வீதியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட குருநாதர் பொன்னையா சிவகுருநாதன் அவர்கள் 31-10-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ரோகிணியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

கு.பொ.சி வரதராஜா(ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி யாழ்ப்பாணம்), பாக்கியலட்சுமி(ஐக்கிய அமெரிக்கா), இரங்கராஜா(ஓய்வுபெற்ற பிரதம செயலாளர் வடக்கு கிழக்கு), சௌந்தரராஜா(பொறியியலாளர்- பஹ்ரைன்), விஜயலட்சுமி(இலங்கை), ஜெயலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கதிரேசம்பிள்ளை(சிங்கப்பூர்), நடராசா(சிங்கப்பூர்), தியாகராசா(சிங்கப்பூர்), குலசேகரம்பிள்ளை(அவுஸ்திரேலியா), உருத்திரன்(சங்கீதபூஷணம்- தொல்புரம்), தங்கச்சியம்மா(இலங்கை), அம்புஜம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜயலட்சுமி(சிங்கப்பூர்), சின்னம்மா(சிங்கப்பூர்), பரமேஸ்வரி(இந்தியா), சிவஞானசுந்தரம்(இலங்கை), சிவயோகம்(அவுஸ்திரேலியா), பரமேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,

தர்மாம்பிகை, காலஞ்சென்ற புலேந்திரன்(இ.போ.ச நடத்துனர்), செம்மனச்செல்வி, மதிவதனி(பஹ்ரைன்), காலஞ்சென்ற தர்மகுலசிங்கம்(ஓய்வுபெற்ற கிராமசேவையாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜனனி(ஜக்கிய அமெரிக்கா), கஜானி(கனடா), அரவிந்தன்(பிரித்தானியா), நளினி(அவுஸ்திரேலியா), அனந்தன்(துபாய்), மாலினி(ஜெர்மனி), கிரிஷாந்தி(பிரித்தானியா), அரங்கன்(சுவிஸ்), அருணன்(அவுஸ்திரேலியா), அகிலன்(ஜக்கிய அமெரிக்கா), மதுசூதனன்(அவுஸ்திரேலியா), அஞ்சனன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,

சங்கீதா, கௌதமி, அஞ்சலா, கீர்த்தனா, சரண்யா, மானஸா, அனிருத்தன், அச்சுதன், கிருஷ்ணா, ஆதித்யன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-11-2016 புதன்கிழமை மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பொன்னாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
இல 172,
கோவில் வீதி,
யாழ்ப்பாணம்.

தகவல்
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
இரங்கராஜா — இலங்கை
செல்லிடப்பேசி: +94773868562
சௌந்தரராஜா — இலங்கை
தொலைபேசி: +94212217219
ஜெயலட்சுமி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776124530
கிரிஷாந்தி முகுந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447854805204

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu