திருமதி ரதிதேவி சின்னத்தம்பி – மரண அறிவித்தல்




rathixeviதிருமதி ரதிதேவி சின்னத்தம்பி – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 5 ஏப்ரல் 1943 — ஆண்டவன் அடியில் : 28 ஒக்ரோபர் 2016

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ரதிதேவி சின்னத்தம்பி அவர்கள் 28-10-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மகேசன், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி(PS Master) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சுகுமாரன்(லண்டன்), உதயகுமாரன்(சிங்கப்பூர்), வாசுகி(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவானந்தம், ரஞ்சிதமலர், நித்தியானந்தம், மற்றும் சர்வானந்தம்(ஜெர்மனி) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

எழிலரசி, Dr. நிவேதா, கலாநிதி ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிருஷ், நிரோன், சஞ்சீவ், கோகுல் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

யோஜித், ஸோபிதா ஆகியோரின் ஆசை அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 30-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுகு(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447926620004
உதயன்(மகன்) — சிங்கப்பூர்
தொலைபேசி: +6592965442
வாசுகி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770714401
– — இலங்கை
தொலைபேசி: +94112366863

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu