திரு மரியாம்பிள்ளை அன்ரனி ஜெயநாதன் – மரண அறிவித்தல்
antoniதிரு மரியாம்பிள்ளை அன்ரனி ஜெயநாதன் – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற கோட்டக்கல்வி அதிகாரி, வடக்கு மாகாணசபை முல்லை மாவட்ட உறுப்பினர், வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர்)
தோற்றம் : 11 மே 1948 — மறைவு : 1 ஒக்ரோபர் 2016

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை அன்ரனி ஜெயநாதன் அவர்கள் 01-10-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மரியாம்பிள்ளை(முன்னாள் முல்லைத்தீவு பட்டின சபைத்தலைவர்) மேரி திரேசா தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை பிறிஜெற்றம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மேரி அமலோற்பவநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

பீற்றர் இளஞ்செழியன், றெஜி இளஞ்சோழன், காலஞ்சென்ற கிறிஸ்டி இளஞ்சேந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மேரி ஆன் பிரான்ஸிஸ்கா(லீலா), அலோஷியஸ் நேசராஜா(குலசிங்கம்), மேரி பிறிம்ரோஸ்(புசி), அன்ரனிப்பிள்ளை(அன்ரன்), மேரி கொன்செப்ரா(பேபி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செபமாலை, செபமணி(லங்கநாதன்), மேரிரோஸ் ஜசிந்தா(சின்னா), வின்சன் ஞானமணி, மேரிபுளோரன்ஸ், பூபாலசிங்கம், பெஞ்சமின் அருமைநாயகம், மேரிராணி, சேவியர் குலநாயகம், விக்டர் தனி நாயகம், மேரிநிர்மலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 06-10-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கரைதுறைப்பற்று பிரதேச சபை மைதானத்தில்(முல்லைத்தீவு கச்சேரிக்கு முன்னால்) பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 03:00 மணியளவில் முல்லைத்தீவு புனித இராயப்பர் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் உன்ணாப்புலவு கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பீற்றர் இளஞ்செழியன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772045444
றெஜி இளஞ்சோழன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94714820347

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu