செல்வி மாசில்லா மனுவேற்பிள்ளை (பூபதி) – மரண அறிவித்தல்
Ms pure_ manuverpillai (Bhupathi)
பெயர் : செல்வி மாசில்லா மனுவேற்பிள்ளை (பூபதி)
பிறப்பு :
இறப்பு : 2013-05-06
பிறந்த இடம் : பாண்டியன்தாழ்வு
வாழ்ந்த இடம் : பாண்டியன்தாழ்வு
பிரசுரித்த திகதி : 2013-05-07

பாண்டியன்தாழ்வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி மாசில்லா மனுவேற்பிள்ளை (முன்னாள் ஆசிரியை, புனித அன்னாள் ஆலய பாலர் பாடசாலை) நேற்று (06.05.2013) திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கு.அ.மனுவேற்பிள்ளை அன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும், ஜீவரெட்ணம், எலிசபேத் ராணி, நவரெட்ணம், மேரிதிரேசா றதி, துரைரெட்ணம் (ஜேர்மனி) ஆகியோரின் சகோதரியும், றோஸ்மலர், சாள்ஸ் பாபு,யோகராசா ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும், மனுவேற்பிள்ளை, சத்தியாவதி, சித்திராவதி, காயித்திரி, தேவதாஸ், அனுஷா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று (07.05.2013) செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்திலிருந்து பி.ப.2.30மணிக்கு அன்னாள் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, திருப்பலியின் பின்பு புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலைக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : ஜீவரெட்ணம் (சகோதரன்)

தொடர்புகளுக்கு

ஜீவரெட்ணம் (சகோதரன்) – 40/2,கொழும்புத்துறை வீதி, சுண்டுக்குளி,யாழ்ப்பாணம் ,

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu