திருமதி வசந்தராணி கமலநாதன் – மரண அறிவித்தல்




vasantharaniதிருமதி வசந்தராணி கமலநாதன் – மரண அறிவித்தல்

(முன்னாள் தாதி- தெல்லிப்பழை கூட்டுறவு வைத்தியசாலை, பாஷையூர் மகப்பேற்று நிலைய பொறுப்பாளர்)
இறப்பு : 29 யூலை 2016

யாழ். தெல்லிப்பழை புதுத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், உடுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தராணி கமலநாதன் அவர்கள் 29-07-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா (பத்திரிகை முகவர்- தெல்லிப்பழை) செல்லமா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கமலநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

வாசன்(லண்டன்), மயூரன்(கனடா), சுமிதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வசந்தமலர், ஜெயமலர், ஜெயதேவி, காலஞ்சென்ற விமலாதேவி, தவராஜா (ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்

ஆனந்தரூபன்(அருள்- லண்டன்), சிவனேஸ்வரி(லண்டன்), மயூரதா(கனடா), ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-08-2016 திங்கட்கிழமை அன்று மு. ப. 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யபடும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94771914061
செல்லிடப்பேசி: +94765649521

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu