திருமதி ஸ்ரீகலா யோகராஜா – மரண அறிவித்தல்




srikalaதிருமதி ஸ்ரீகலா யோகராஜா – மரண அறிவித்தல்

(முன்னாள் நீதிமன்ற உத்தியோகஸ்தர்- இலங்கை, தமிழ் கல்விக்கூடம் ஆசிரியை -Leicester)
அன்னை மடியில் : 13 யூலை 1971 — ஆண்டவன் அடியில் : 1 ஏப்ரல் 2016

யாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Leicester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீகலா யோகராஜா அவர்கள் 01-04-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராஜா அன்னலெட்சுமி தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யோகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

பவித்ரா, பவினாஸ், பவனாஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற ராதாதேவன், சசிகலா(கொழும்பு), வாசுதேவன்(யாழ்ப்பாணம்), சந்திரகலா(ஆசிரியை- புங்குடுதீவு மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற வாமதேவன், மேகலா(டென்மார்க்), காலஞ்சென்ற யோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பாசமுள்ள உத்தமியே!
உறங்காத உள்ளமொன்று
உணர்வோடு போராடி
உறைவிடம் தேடியிங்கே
உயிர் மடி சேர்ந்ததெங்கே?

அலையலையாய் காரணங்கள்
ஆயிரமாய் குவிந்தாலும்
காலனவன் கவர்ந்திட்ட உங்கள்
இன்னுயிரை மீட்டிடுமோ?

பற்றோடு பாசமதை நட்போடு பகிர்ந்தளித்து
மெய்யான அன்பதனில்
எல்லோருக்கும் இரங்கி நின்றாய்
பொய்யான வாழ்வென்று
புறப்பட்டு போனதெங்கே?

உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது
உறவுகளை அன்பால்
இறுக்கிக் கொண்டவளே

ஆண்டவன் பாதங்கள் மட்டுமல்ல
எம் இதயங்களும் என்றென்றும்
உங்கள் ஆத்மாவின் இருப்பிடம்

சாந்தி! சாந்தி! சாந்தி!
அன்னாரின் ஆத்மா சாந்தியடையப்
பிராத்திக்கின்றோம்!

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 20/04/2016, 12:00 பி.ப — 01:30 பி.ப
முகவரி: Church of Our Lady, 15 Peebles Way, Leicester LE4 7ZB, United Kingdom
தகனம்
திகதி: புதன்கிழமை 20/04/2016, 02:30 பி.ப
முகவரி: Gilroes Cemetery, Groby Rd, LE3 9QG, United Kingdom
தொடர்புகளுக்கு
மேகலா பரமேஸ்வரன்(சகோதரி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447459229270

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu