திருமதி காந்திமதி விஜயரட்ணம் – மரண அறிவித்தல்




kanthemathyதிருமதி காந்திமதி விஜயரட்ணம் – மரண அறிவித்தல்

இறப்பு : 1 ஏப்ரல் 2016

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட காந்திமதி விஜயரட்ணம் அவர்கள் 01-04-2016 வெள்ளிக்கிழமை அன்று சாயிநாதனின் பாதங்களை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(சின்னப்பாட்டா) நல்லம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விஜயரட்ணம்(கமலநலசேவை திணைக்களம், முன்னாள் தலைவர்- திருநெல்வேலி சாயி சமித்தி, வடபிராந்திய சாயி சமித்தி இணைப்பாளர், தலைவர்- பாணங்குளம் நாச்சிமார் கோயில் அறங்காவல் சபை, நிர்வாக செயலாளர்- இராமநாதன் அறங்காவலர் சபை) அவர்களின் அன்பு மனைவியும்,

சற்குணமதி நவரட்ணம், கனகாம்பிகை மகேந்திரன், சியாமளா திருச்செந்தூர்நாதன், காலஞ்சென்ற சந்திரா புனிதவேல், சிவகோஸ்வரி சுகுமார், சிவபாதநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, விஜயலக்‌ஷ்மி பொன்னுத்துரை, விஜயாம்பாள் சோமசுந்தரம், மற்றும் யோகேஸ்வரி அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர், சாயி இல்லம்- கனடா
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 05/04/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: புதன்கிழமை 06/04/2016, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
நவரட்ணம் — கனடா
தொலைபேசி: +14162829595
சிவபாதநாதன்(விஜயா) — கனடா
செல்லிடப்பேசி: +12896601311
சாயி இல்லம் — கனடா
தொலைபேசி: +14165681221

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu