திருமதி ராணி மேரி திரேஸ் மனுவேற்பிள்ளை – மரண அறிவித்தல்




raniதிருமதி ராணி மேரி திரேஸ் மனுவேற்பிள்ளை – மரண அறிவித்தல்

(ஓய்வு பெற்ற ஆசிரியை- இளவாலை)
மலர்வு : 30 மே 1928 — உதிர்வு : 30 மார்ச் 2016

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், இளவாலையை வசிப்பிடமாகவும் கொண்ட ராணி மேரி திரேஸ் மனுவேற்பிள்ளை அவர்கள் 30-03-2016 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை அருளப்பு(சித்த ஆயுள்வேத வைத்தியர்- இளவாலை), விக்ரோறியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிசிலியா, அல்வீனம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியை), ஜோசப் அல்போன்சஸ்(ஓய்வுபெற்ற அதிபர்), அருட்சகோதரி ஜெறோம்(திருக்குடும்ப கன்னியர் மடம்), பொன்றோஸ்(ஓய்வுபெற்ற ஆசிரியை), பொலின்றோசா, மேரி றோஸ்விந்தா(ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, மனுவேற்பிள்ளை, மேரிதிரேசா, சுவாம்பிள்ளை, ஜேசுதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சொர்ணறாயா குடும்பம், இராயேஸ் ஸ்ரனிஸ்லாஸ் குடும்பம், இராணி பெர்னாண்டோபுள்ளே குடும்பம், அன்ரன் குடும்பம்(பிரான்ஸ்), நாதன் குடும்பம்(அவுஸ்திரேலியா), மனோ குடும்பம்(பிரான்ஸ்), விக்ரர் குடும்பம்(பிரான்ஸ்), ரவி குடும்பம்(கனடா), யூட் குடும்பம்(பிரான்ஸ்), நிமால் குடும்பம்(பிரான்ஸ்), மீறா, ரதினி ஆகியோரின் சிறிய, பெரியதாயாரும், பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இரங்கல் திருப்பலி 02-04-2016 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் புனித அன்னம்மாள் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் இளவாலை சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 03,
ஸ்ரான்லி றோட்,
யாழ்ப்பாணம்.

தகவல்
அன்ரன் சிங்கறாயா(பிரான்ஸ்)
தொடர்புகளுக்கு
அன்ரன் சிங்கறாயா — பிரான்ஸ்
தொலைபேசி: +33143633515
சொர்ணறாயா — இலங்கை
தொலைபேசி: +94778808920
செல்லிடப்பேசி: +94776080988

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu