பிரபல நடிகை கல்பனா காலமானார்
kalpanaபிரபல திரைப்பட நடிகையும், நடிகை ஊர்வசியின் சகோதரியுமான நடிகை கல்பனா காலமானார்.

படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றிருந்த நிலையில், உடல்நலக்குறைவால் கல்பனா உயிரிழந்ததாக திரையுலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழகளில், 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், படப்பிடிப்பு ஒன்றிக்காக, ஐதராபாத் சென்றிருந்த போது, உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஹோட்டல் அறையில் தங்கியிருந்த கல்பனாவுக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்பனா திடீர் மரணம் அடைந்தது திரை உலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மலையாள இயக்குனர் அனில் குமாரை திருமணம் செய்து கொண்ட நடிகை கல்பனா, கடந்த 2012ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். மறைந்த நடிகை கல்பனாவுக்கு ஸ்ரீமயி என்ற மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu