‘ராக்கெட் நாயகன்’ அப்துல் கலாம் காலமானார்




abdul-kalamகுடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் காலமானார்: அவருக்கு வயது 84

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இன்று ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் பேசுவதற்காக டெல்லியில் இருந்து சென்றார். அங்கே மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி சரிந்துவிட்டாராம் கலாம். உடனடியாக அவரை ஷில்லாங்கில் உள்ள Bethany மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருந்திருக்கிறார்கள். ஆனால், மாலை 7 மணி அளவில் மருத்துவமனைக்கு வந்துசேர்ந்தபோதே கலாமின் உயிர் பிரிந்திருந்தது என அந்த மருத்துவமனையின் தலைமை இயக்குனர் டேவிட் சைலோ தெரிவித்துள்ளார். 7.45 மணிக்கு கலாம் மரணமடைந்ததை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது மருத்துவமனை. கடுமையான மாரடைப்பால்தான் கலாம்-ன் உயிர் பிரிந்திருக்கலாம் என்கிறார் டேவிட் சைலோ.

அப்துல் கலாம்

அப்துல் கலாம் அக்டோபர் 15, 1931 அன்று ராமேஸ்வரத்தில் பிறந்தவர்.

இந்தியாவை சர்வதேச அளவில் தலைநிமிர வைத்த பொக்ரான் அணு ஆயுத சோதனை முதல், கால்கள் பழுது பட்டவர்களுக்கான எடை குறைந்த மாற்றுக் கால்கள் வரை இவரது தலைமையில் விளைந்தவை.

இந்தியா அணு ஆயுத சாதனத் திறனில் ஐந்தாம் இடத்திலும், செயற்கைக் கோள் ஏவு திறனில் ஆறாம் இடத்திலும் முன்னேறி அமரக் காரணமானவர்.

2002 – 2007 இந்தியக் குடியரசின் 11வது குடியரசுத் தலைவராக சேவையாற்றியவர். பல விருதுகளையும் டாக்டர் உள்ளிட்ட பல பட்டங்களையும் மறுத்தவர்.

இவர் தனது வாழ்க்கை வரலாற்றை ‘அக்னிச் சிறகுகள்’ என்ற பெயரில் எழுதியவர். தன் பதவிக் காலத்தில் பல லட்சம் மாணவர்களைச் சந்தித்த முதல் குடியரசுத் தலைவர்.

84 வயதிலும் துவண்டு போகாமல் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்கள் தோறும் பயணம் செய்து இயற்கையின் அவசியத்தையும், மரங்களின் முக்கியத்துவத்தையும் விதைத்தவர்.

நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 1997ல் அப்துல் கலாம் பெற்றார்.

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu