திரு கனகரட்ணம் கனகசபை – மரண அறிவித்தல்




kanakasabaiதிரு கனகரட்ணம் கனகசபை – மரண அறிவித்தல்

(முன்னாள்- இராணுவ அதிகாரி இலங்கை, பழைய மாணவர்- கொக்குவில் இந்துக் கல்லூரி)

மண்ணில் : 13 யூன் 1934 — விண்ணில் : 1 மே 2015

யாழ். கொக்குவில் நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், மன்னார் தாராபுரத்தை வதிவிடமாகவும், கனடா Etobicoke வை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் கனகசபை அவர்கள் 01-05-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை வள்ளிஅம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பவளம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கௌரிமாலன்(B com. Hons, ஸ்தாபகர் திருச்செந்தூர் முருகன் ஆலயம்), அமிர்தயோகன்(தென்இந்தியா) ஆகியோரின் நேசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், குமாரசாமி, அருணாசலம், மற்றும் செல்லையா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற மாலன்கோ(B com. Hons), காஞ்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மயூரி, செந்தூரி, சாயித்திரி, அசோக்குமரன்(கனடா), கௌசிகா, பாலினி(தென்இந்தியா) ஆகியோரின் அன்பு பேரனும்,

விதுர்னியா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 05/05/2015, 07:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada.
தகனம்
திகதி: புதன்கிழமை 06/05/2015, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada
தொடர்புகளுக்கு
பவளம்மா கனகரட்ணம்(மனைவி) — கனடா
தொலைபேசி: +14167455359
மயூரிமாலன்(பேத்தி) — கனடா
தொலைபேசி: +16474483030
செந்தூரிமாலன்(பேத்தி) — கனடா
தொலைபேசி: +14169974357
சாயிமாலன்(பேத்தி) — கனடா
தொலைபேசி: +14167099884
அமிர்தயோகன் கனகரட்ணம்(மகன்) — இந்தியா
செல்லிடப்பேசி: +918098437995
குமரன்(பேரன்) — கனடா
தொலைபேசி: +16477795687
சுமணகௌரி(பெறாமகள்) — கனடா
தொலைபேசி: +14166131853

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu