திருமதி பத்மராணி உமாபதி – மரண அறிவித்தல்
umapathiதிருமதி பத்மராணி உமாபதி – மரண அறிவித்தல்

ஜனனம் : 7 ஒக்ரோபர் 1953 — மரணம் : 27 ஏப்ரல் 2015

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், மணிக்கூட்டு வீதியை வதிவிடமாகவும் கொண்ட பத்மராணி உமாபதி அவர்கள் 27-04-2015 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜகுலசிங்கம் அசலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குருநாதர் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

உமாபதி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சத்தியகுமார், சதீஸ்குமார், மற்றும் சுரேஷ்குமார்(நோர்வே), சைலஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயராணி, சிறிகாந்தா, விஜியராணி, பாமினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சியாமளா(நோர்வே), பிரபாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற அழகரட்ணம், அருளானந்தம்(இலங்கை), வசந்தலீலா(இலங்கை), ரவி(இலங்கை), காலஞ்சென்ற அம்பலவாணர், நடேசபிள்ளை(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், தங்கவடிவேல், இராமுப்பிள்ளை, இலட்சுமணன், மற்றும் பசுபதிப்பிள்ளை(கனடா), பரமேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற தியாகராஜா, கமலாதேவி தம்பதிகள், காலஞ்சென்ற சிவானந்தம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு சம்மந்தியும்,

சிந்துஜா(நோர்வே), பிரஷிகா(பிரான்ஸ்), பிறிந்தியா(பிரான்ஸ்), சபிஷாந்த்(பிரான்ஸ்), அக்‌ஷயா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிரபாகரன்(மருமகன்- பிரான்ஸ்)
தொடர்புகளுக்கு
– — பிரான்ஸ்
தொலைபேசி: +33660311452
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94775112424
– — பிரான்ஸ்
தொலைபேசி: +33980481231

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu