திருமதி நேசமலர் கனகலிங்கம் – மரண அறிவித்தல்




nesamalarதிருமதி நேசமலர் கனகலிங்கம் – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய உடற்கல்வி விரிவுரையாளர்- பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலை)

மலர்வு : 7 சனவரி 1939 — உதிர்வு : 26 சனவரி 2015

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சோலை அம்மன் கோவில் வீதியை வசிப்பிடமாகவும், கொழும்பு தெகிவளையை வதிவிடமாகவும் கொண்ட நேசமலர் கனகலிங்கம் அவர்கள் 26-01-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, லக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சரவணமுத்து, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகலிங்கம்(இளைப்பாறிய ஆசிரியர்- சாவகச்சேரி இந்துக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

சறத்சந்திரா, உத்தரை(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற நேசதுரை, தர்மசீலன்(கனடா), பரமநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புவியலக்சுமி(ஜெர்மனி), யசோதரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சகுந்தலா(இலங்கை), வசந்தாதேவி(கனடா), இரத்தினம்மா(கனடா), ஞானம்பிகை(இலங்கை), காலஞ்சென்றவர்களான குமாரவேலு, முத்தையா, சிவகுரு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கோக்குருசில் அவர்களின் அன்பு அப்பம்மாவும்,

ஹரீஸ், துஷாரா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2015 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கொழும்பு கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
உத்தரை(மகள்)
தொடர்புகளுக்கு
மகள் — பிரித்தானியா
தொலைபேசி: +442477045065
– — இலங்கை
தொலைபேசி: +94112719728
செல்லிடப்பேசி: +94726706726

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu