அமரர் ஐயாத்துரை சிவசாமி – 3ம் ஆண்டு நினைவஞ்சலி
iyathurai அமரர் ஐயாத்துரை சிவசாமி – 3ம் ஆண்டு நினைவஞ்சலி
(இளைப்பாறிய அதிபர்)

பிறப்பு : 10 ஓகஸ்ட் 1930 — இறப்பு : 8 பெப்ரவரி 2012

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி, கனடா Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை சிவசாமி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஏழு ஏழு ஜென்மங்கள் ஆனால் என்ன –
எம் உள்ளம் உங்களையே நினைத்தே நிற்கும்
கண் முன்னே நிற்பது போல் இனிய தோற்றம்
காணாது தவிக்கின்றோம் – எங்கள் பப்பா!
விண் மீது உலாவி வரும் பருதியைப் போல்
விளக்காகி ஒளி காட்டி வாழ்ந்தே நின்றீர்
கண் மூடி விழிப்பதற்குள் – கணப் பொழுதில்
காலனிடம் சென்றது ஏன் ? கலங்குகின்றோம்!!

கறை படியா வாழ்வொன்றை வாழ்ந்து முடித்தீர்
கண்ணியத்தின் காவலனாய் – சான்று பகர்ந்தீர்
நிறைவு பெற்ற வாழ்வெமக்கு தந்து மகிழ்ந்தீர்
நிலைத்து நிற்கும் கல்வி பெற நாளும் உழைத்தீர்
மறைவு வரும் என்றுணர்ந்தா – வார்த்தை அளந்தீர்
மனத்திடையே இருந்தவற்றை – சொல்லி முடித்தீர்
இறைவனிடம் போவதற்கா – இவைகள் எல்லாம் – என்று
ஏங்குகின்றோம் உங்களைத் தினமும் எண்ணி!!

கல்வியோடு மட்டும் நீங்கள் நிற்கவில்லை
கலைகளுக்கும் – கன்னித் தமிழ் உரிமைகட்கும்
நல்ல பல ஆக்கங்களை நாளும் செய்து
நாட்டினிலே புகழ் படைத்து வாழ்ந்தே – நின்றீர்
சொல்லும் தமிழ் வாழ்வதற்காய் – சுகத்தை இழந்தீர்
சோதனைகள் வந்த போதும் உறக்கம் மறந்தீர்
அல்லல்படும் மக்களின் அவதி கண்டு
ஆறுதலாய் வேலை பல செய்து முடித்தீர்!

உருவாக்கினீர்! எம்மை கரு வாக்கினீர்!!
உயுரூட்டினீர் ! உலகம் தனைக் காட்டினீர்!
பயிராக்கினீர்! வாழ்வின் பயன் காட்டினீர்! – நேர்மை
பாதைக்கு என்றுமே வழி காட்டினீர்! – மானம்
தவறாது வாழ் என்று – தளம் காட்டினீர்!
தாய் மண்ணுக்கும் தமிழுக்கும் புகழ் கூட்டினீர்
நிறைவாக வாழ் என்று நெறி காட்டினீர் ! நிமிர்ந்து
நேர்த்தியுடன் – கீர்த்திபெற – உரம் ஊட்டினீர்!

திங்களது சூரியனின் ஒளி இழந்தது போல் – அம்மா
தினம் கலங்கி துன்பமதால் தான் மெலிகின்றார்
உங்களது நினைவதைதான் தினமும் கதைகின்றார்
உள்ளமது வாடுவதால் நோயும் கொள்கின்றார்
மங்களமாய் கண்ட நிலை மறைந்து போனதால்
மனமும் அதைப் பார்ப்பதற்கு கலங்குகின்றது
தங்களைத் தான் கனவுதனில் காண நேர்ந்திடில் – நியம்
தானதிலே வந்தது போல் நினைவு கொள்கின்றார்!!

எண்ண வில்லை நடந்தவைகள் நியாம்தானா என்று?
நினைக்க முன்னே – மறைந்து விட்டீர் !!
சாந்தி! சாந்தி!!

உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
உறவினர்கள் மற்றும் நண்பர்கள்

தகவல்
குடும்பத்தினர்

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu